பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி பட நிறுவனங்களின் தயாரிப்பில், த்ரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள புதிய படம், ‘பார்க்கிங்’.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும்,இந்துஜா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பலூன்’ படஇயக்குனர் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இப் படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் சரியான தீட்டமிடல் மூலம் இப்படக்குழு முடித்துள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஜிஜு சன்னி கவனிக்க,சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.