அமிதாப் பச்சனின் சீனி கம், பா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநரான பால்கி, இந்திய திரையுலகில் பல மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும், எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளவருமான இசைஞானி இளையராஜாவின் ‘பயோபிக்’ படத்தை இயக்க வெகு நாட்களாகவே ஆர்வம் காட்டி வரும் நிலையில், விரைவில் தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை எடுக்கப் போவதாக கூறி இளையராஜா,தனுஷ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இது குறித்து இயக்குனர் பால்கி கூறுகையில்,’இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் தான் இளையராஜா பயோபிக்கில் நடிக்க சரியான ஆள் என்றும் இளம் வயது இளையராஜா தோற்றம் முதல் இப்போது இருக்கும் இளையராஜாவின் தோற்றம் வரை நடிகர் தனுஷ் கச்சிதமாக பொருந்துவார் என்றும் கூடிய விரைவிலேயே இந்த படத்தை ஆரம்பிக்கும் பணிகளை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்