கவுதமியின் பிரிவு குறித்து கமல்ஹாசன் கூறியதாவது:
கவுதமிஎடுத்துள்ள முடிவு,அவருக்கு ஆறுதலான முடிவாகத் தோன்றினால் எனக்கும் அதில் விருப்பமே. எனது தனிப்பட்ட உணர்வுகள் என்பது இதில் முக்கியம் இல்லை. இந்த முடிவால் கவுதமிக்கும் சுப்புவுக்கும் எந்த அளவுக்கு மகிழ்ச்சி என்பதே முக்கியமானது. அவர்களுடைய முக்கிய தேவைகளுக்கு என்றும் நான் உதவியாக இருப்பேன்.ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன், சுப்புலட்சுமி ஆகிய மூன்று பேரும் என் மகள்கள் என்பதால்இந்த உலகின் மிக அதிர்ஷ்டக்கார தந்தையாகவே நான் என்னை உணர்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.