அண்மைக்காலமாக டிரெண்டிங்கில் உள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி.திரையுலக பிரபலங்களை படாத பாடு படுத்தி வருகிறது.இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தை அல்லது வீடியோவை சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்துத் மார்பிங் மிக சுலபமாக செய்துவிட முடியும்.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.தற்போது பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் ராஷ்மிகா தற்போது ’புஷ்பா 2’ ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகம் மார்பிங் செய்யப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இவ்வீடியோவிற்கு பாலிவுட் பிக் பி அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இவ்விவகாரம் குறித்து நடிகர் அமிதாப்பச்சன் இதன் ஒரிஜினல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஷாரா படேல் என்ற நடிகை தான் அந்த வீடியோவில் ஒரிஜினலாக இருப்பது என்றும், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து இந்த வீடியோ மார்பிங் செய்து வெளியாகி உள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவால் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ள ராஷ்மிகா தனது டுவிட்டரில்,”, நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் ஆபாச வீடியோவைப்பற்றி பேச வேண்டும்.
आजकल भारत सहित पूरे विश्व में AI technology का क्रेज तेजी से बढ़ रहा है।
लेकिन इसका दुरुपयोग भी उसी अनुपात में बढ़ते हुए देखा जा सकता है।
नीचे के वीडियो में किस प्रकार से deep fake वीडियो का उदाहरण देखा जा सकता है।
किसी दूसरे लड़की की वीडियो को#RashmikaMandanna का चेहरा लगाकर… pic.twitter.com/tL6AJQxsp9— रत्नेश राय सांकृत 🇮🇳 (@ratneshrai8) November 6, 2023
இதுபோன்ற ஒன்று நேர்மையாக, எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் தவறாகப்பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது.
கற்பனை செய்ய முடியவில்லை: இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனது பாதுகாப்புக்கு துணையாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால், இதை எப்படி சமாளித்து இருப்பேன் என்று என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாது.
இதுபோன்ற, மோசமான செயலால் நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இதுபோன்ற செயலை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ரஷ்மிகா தனது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்