சூர்யாவின் 42வது படமாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ உருவாகி வருகிறது. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பீரியட் ஜானரில் பேண்டசியாக உருவாகும் இப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இருளில் நெருப்பின் ஒளியில் சூர்யா தனது கையில் தீப்பந்தத்துடன் மிரட்டலாக காட்சியளிக்கும் இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.