சின்னத்திரையிலிருந்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகி பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு திரையுலகிலும் ஆர்வம் காட்டி வரும் பிரியா பவானி சங்கர்,தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.
அவ்வப்போது இவர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கருடன் தான் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை அவரது காதலர் ராஜவேல் வெளியிட்டுள்ளார்.தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து, பிரியா பவானி சங்கருக்கு, ராஜவேல் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களால் வைரலாக பரவி வருகிறது.இதே புகைப்படத்தை பிரியா பவானி சங்கரும் வெளியிட்டுள்ளார்.