நல்லவனாக வாழ ஆசைப்படுகிறவனை இந்த சமூகம் எவ்வாறு மாற்ற விரும்புகிறது, அந்த முயற்சியை முறியடித்து தன்வழியில் செல்கிற அந்த நேர்மையான அதிகாரி எப்படியெல்லாம் சீராமப்படுகிறான் என்பதை சொல்கிறது ரெய்டு .
காக்கிசட்டைக்குள் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு. . நீதி நேர்மை என்பதெல்லாம் வாய்ப் பேச்சுடன் நின்றுவிடவேண்டும் என்கிற காவல் துறையின் எழுதப்படாத விதி இவருக்கு செட்டாகவில்லை !ஆக்ஷன் ,ஆவேசம் அள்ளிவரும் மோதல்கள்,அநீதி கண்டு பொங்கும் இயல்பு கச்சிதமாக பொருந்திப்போகிறார் விக்ரம் பிரபு.அன்னை இல்லத்தின் கொடை .
என்னவோ தெரியவில்லை , ,நாயகி இவருக்கு அந்நியமாகி விடுகிறார்.திரையில் இருந்து விலகி விட்ட உணர்வு ஸ்ரீ திவ்யா. பொருந்த வில்லை. கன்னட கதையை ரீமேக் செய்யும் அளவுக்கு அப்படி அதில் என்னதான் கவர்ந்திழுத்தது என வியந்து போய்விடுகிறார்கள் ரசிகர்கள். அனந்திகா அடிசனல் ஹீரோயின் .
இயக்குநர் வேலுபிரபாகரன், ரிஷிரித்விக், ஆகியோர் வில்லன்கள் .இவர்களெல்லாம் வில்லனா என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது கேஸ்டிங் குழு
கதிரவனின் ஒளிப்பதிவில் அழுத்தம் . காட்சிகளை வாழ வைத்திருக்கிறது
சாம்.சி.எஸ் இசை. தீபாவளி மோடில் பாடல்கள்.
வசனங்கள் இயக்குநர் முத்தையா.
கார்த்தி எனும் புதியவர் இயக்கியிருக்கிறார்.
ரெய்டில் கனமாக எதுவும் சிக்கவில்லை. “எங்கிட்ட மாட்டாதே.. காணாமப் போயிடுவே” இது பட பாடல் வரி.
–தேவிமணி