தமிழ்திரையுலகில்,கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில், கடந்த 2001-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேட நடிப்பில், அப்போதே நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’. மெகா பட்ஜெட் படமான இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகன், வில்லன் என நடிப்பில் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் மிரட்டியிருந்தார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,தற்போது இப்படத்தை பெரும் பொருட்செலவில் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி இப் படத்தை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வரும் டிசம்பர் 8-ம் தேதி ‘ஆளவந்தான்’ திரைப்படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களை ஏகத்துக்கும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற கவிதை பாடல் நாளை மாலை 5.03 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
புதுமைக்கு வித்திட்ட ஆளவந்தான்-ஐ வெளியிடுவதில் அளவில்லா ஆனந்தம் @ikamalhaasan @Suresh_Krissna #Aalavandhan pic.twitter.com/xrNEw5CPX9
— Kalaippuli S Thanu (@theVcreations) November 17, 2023