ஏறத்தாழ பெரியமனிதர்கள் என்றில்லாமல் நடுத்தர வகுப்பினர்க்கும் இப்படியொரு நோய் .!
மனைவி இருந்தாலும் மாற்றாக ஒரு தொடுப்பு. அதாவது வைப்பாட்டி வேண்டும்.
இங்கிலாந்தில் இருக்கும் டாக்டர் ஒருவரின் வைப்பாட்டி திடீர் மரணம் அடைகிறார். இந்த சாவை மறைக்கிறார் ஆசை நாயகன். விளைவு ?
பல விபரீதம்.! இதுதான் ‘சில நொடிகளில்’ படத்தின் கதை.
டாக்டராக ரிச்சர்ட்ரிஷி. இவரது வைப்பாட்டியாக யாஷிகா ஆனந்த். மனைவியாக புன்னகைப்பூ கீதா. . திடீரென யாஷிகா ஆனந்த் மண்டையைப் போட அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. வில்லங்கம் குடியேறுகிறது. இவர்களை வைத்து பின்னப்பட்டுள்ள கதை நம்மை ஈர்க்கிறதா ,அல்லது விரட்டுகிறதா ?
ரிச்சர்ட்ரிஷி பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும் காட்சிகளை நமக்குள்ளும் கடத்துகிறார்.சிறப்பான நடிப்பு. புன்னகைப்பூ கீதாவின் கேரக்டர்தான் கதையின் பலமே.! புருஷன் இடம் மாறிப்போனாலும் கேடு நமக்குத்தானே என்பதை உணர்ந்து கதையை நகர்த்துகிறார். சிக்கலை அவர் அணுகும் விதம் அருமை.
அடுத்தவள் புருஷனை தட்டிக்கொண்டு போகிற கேரக்டர் ,விளம்பர அழகி, கவர்ச்சியில் கலக்கும் கேரக்டர் யாஷிகா ஏதோ பரவாயில்லை ரகம்
மசாலா காஃபி, பிஜாரன் சுரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஆளுக்கொரு பாடல். .
ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன் இலண்டன் மாநகரின் புற அழகை வளைத்து வளைத்துக் காட்டியிருக்கிறார். திறமைசாலி.
நான்கே கேரக்டர்கள் என்றாலும் இயக்குநர் வினய்பரத்வாஜ் அமைத்திருக்கும் திரைக்கதை நல்ல அஸ்திவாரம்.
பாடம் சொல்லுகிற கதை. தட்ஸ் ஆல் .
–தேவிமணி