சாவு வீடுகளில் சரக்குகள், தண்ணீர் மாதிரி புழங்கும் .. ஒப்பாரி வைக்கும் அந்தக்காலத்து பெரிசுகள் கூட ‘உள்ளுக்குள் போட்டுக் ‘கொண்டு ஒன்பது கட்டைகளில் குரல் எழுப்புவார்கள். நம்ம சந்தானம் படத்தில் சரக்கும் இருக்கு, அறுப்பும் இருக்கு.
கதை எண்பதுகளில் நடக்கிறது. சந்தானம் சகல கலா வல்லவன் கமல்ஹாசனின் வெறி பிடித்த ரசிகர்.அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் கமல் தானே ! அதனால் அவரை முன்னிலைப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் !.
சந்தானத்தின் தாத்தா ஆர். சுந்தரராஜன் ” ஆ.. கற்கண்டு ” என சொல்லி வைரங்களை விழுங்கி விட்டு கட்டையைப் போடுகிறார். அந்த வைரங்களை ஆட்டையப் போட பிளேடும் கையுமாக வருகிறது தில்லாலங்கிடி கூட்டம். பொம்பளை வேஷம் போட்டுக்கொண்டு செம கட்டையாக இருக்கிறார் கூட்டத்தின் நாயகி ஆனந்தராஜ். !!! இந்த நாட்டுக்கட்டை மீது சந்தானத்தின் அப்பன் ஆடுகளம் நரேனுக்கு அடங்கா காமம்.!!! எழவு வீட்டில் என்னென்னமோ நடக்கிது . சிரிக்க ‘வைக்க’ வேண்டும் என்பதற்காக இயக்குநர் கல்யாண் படாதபாடு பட்டிருக்கிறார். பலன் கிடைக்குமா என்பதை தியேட்டர்களின் ஹவுஸ் புல் போர்டு சொல்ல வேண்டும். விதி வலியதுடா ராமகிருஷ்ணா !!!
வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கி இருக்கிறார் சந்தானம்.!இவரது காருக்கு மக்கள் திலகம் எம். ஜி. ஆர் பயன்படுத்திய காரின் எண் கொடுத்திருப்பது எதன் குறியீடு?புரியல. !!!
நாயகி ராதிகா ப்ரீத்தி புதுமுகம். பாவாடை தாவணி நகரத்துப்பெண்.
தங்கையாக வரும் சங்கீதாவுக்கு அண்ணன் சந்தானத்துடன் மோதுகிற முக்கியவேடம். ரசனை !
ஆனந்தராஜ் இல்லாவிட்டால் கதைக்கு ( ! ) கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும் .
இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் மீது தமிழக ரசிகர்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரது கையில் கதாயுதத்தைக் கொடுத்து காலி பண்ணி விட்டார்கள்.
.ஜிப்ரான் ஓசை!
ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் உழைப்பாளர் சிலையின் மாடல்,!
—-தேவிமணி.