இயக்குனர் அமீர் மீதான சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ள ஞானவேல் ராஜாவுக்கு இயக்குனர் சசிகுமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் இது அவர் வைத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது.
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்… என குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? இவ்வாறு இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கூறியுள்ளார்.