நடிகை ஷீலா ராஜ்குமார். பரதநாட்டிய கலைஞரான இவர் இவர் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர், ‘டூ லெட்’, ‘திரெளபதி’, ‘மண்டேலா’, ‘நூடுல்ஸ்’ பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் மலையாளத்தில் வெளியான ‘கும்பளங்கி நைட்ஸ்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.ஷீலா ராஜ்குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை கடந்த 2014-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தனது சமூக வலைதளத்தில்,”திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்” அறிவித்துள்ளார். ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறியது ஏன்? என்பதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.