சென்னை யில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் சிக்கியிருந்த நடிகர் விஷ்ணு விஷால் அரசிடம் உதவி கேட்டிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மூலம் அவரும் அவரது சுற்றத்தாறும் மீட்கப்பட்டுள்ளனர்
நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பக்கத்தில் மோசமான அளவில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நான் உதவியை நாடியுள்ளேன். மின்சாரமோ, வைஃபையோ, ஃபோன் சிக்னலோ எதுவுமே இல்லை. மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எனக்கு சிக்னல் கிடைக்கிறது. எனக்கும், இங்கு வசிக்கும் பலருக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது” என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சிக்கித் தவித்த எங்களை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 படகுகள் செயல்பாட்டில் உள்ளதைக் கண்டேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் பணி சிறப்பாக உள்ளது. அயராது உழைக்கும் அரசு நிர்வாகத்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதில் ஆச்சிரியம் என்னவென்றால் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் சேர்த்து மீட்கப்பட்டுள்ளார். தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்துள்ள அமீர் கான் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.
நேற்று அண்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விட்டதாக கொந்தளித்து நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில், இச் சம்பவத்தை நெட்டிசன்கள் பலரும் மேற்கோள் காட்டி ‘ எவ்வளவு பெரிய ஆள், எவ்வளவு பணம் கொண்ட ஆள். ஆனாலும் தனக்கான உதவி கிடைக்கும் வரை காத்திருந்துள்ளார்.இயற்கையின் முன் அனைவரும் சமமே’ என பதிவிட்டுள்ளனர்