சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் விஷ்ணு விஷால் குடும்பமும், தனது தாயின் சிகிச்சைக்காக அங்கு இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு அவர்கள் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் படகின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.விஷ்ணு விஷால் மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் இன்னொரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அதில் இருந்தது அஜித்குமார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “”எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் எங்கள் ‘வில்லா’ நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையி