பழகிப்போன கதையாக இருந்தாலும் அதற்கு வித்தியாசமான வழியை கண்டு பிடித்து புதுசாக காட்டுகிற உத்தி -புத்தி கேரள தம்பிகளுக்கு நிறைய இருக்கு.
ரஜினிகாந்தின் வெறி பிடித்த ரசிகன் பெண்ணாக மாறினால் என்ன நடக்கும், ஒரு கொலையாளியாக காட்டினால் என்னவாகும் என நினைத்து ‘அவள் பெயர் ரஜினி’ கதையை கொடுத்திருக்கிறார்கள். பேயையும் இணைத்திருக்கிறார்கள் .
ஹீரோ காளிதாஸ் ஜெயராம். தங்கச்சி நமீதாப்ரமோத் .தங்கச்சி வாழ்க்கையில் இடி விழுகுது கார் டாப் மேல ஒரு ஆளை தூக்கிப்போட்டு குத்தி கொலை பண்றதுன்னா சாதாரண காரியமா? காவல்துறை விசாரிக்கிது. ஆனால் காவல்துறையை விட சிறப்பாக துப்பறிகிறார் காளிதாஸ் ஜெயராம் .பெஸ்ட் ஜாய்ஸ் . சிறப்புடன் செய்திருக்கிறார். ஓடுகிறபோது மட்டும் சின்ன சிக்கல் .
நமீதாப்ரமோத், கண்களில் எல்லா உணர்வுகளுமே நொடிப்பொழுதில் வந்து போகிறது. வெகு இயல்பு.
ரஜினியாக நடித்திருக்கும் லட்சுமி கோபால்சாமி, நாயகியாக வரும் ரெபோமோனிகாஜான் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
காவலதிகாரியாக வரும் அஸ்வின்குமார் மிடுக்கு. நேர்மையான அதிகாரி.
காவல்துறையினராக வரும் ரமேஷ்கண்ணா, ஆட்டோ ஓட்டுநராக கருணாகரன் நல்ல தேர்வு.
அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் எழுதிஇயக்கியிருக்கிறார்.திரைக்கதையில் தடுமாற்றம் இருக்கிறது. தமிழ் ,மலையாளம் இரு மொழி தயாரிப்பு.
துணிவுடன் எடுத்திருக்கிறார்கள். ஆல் த பெஸ்ட்.!
–-தேவிமணி.