மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட தமிழ் திரையழகினர் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
ஒட்டு மொத்த திரையுலகினரும் பங்கேற்கும் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற டிசம்பர் 24ம் தேதி நடக்க உள்ளதாகவும் இதில் முதல்வர் மு,க.ஸ் டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர் . விழா ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் இவ் விழா ‘மிக்ஜாம்’ புயல் தாக்கம் காரணமாக அடுத்த மாதம் ஜனவரி 6 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரையுலகின் விழா குழு அறிவித்துள்ளது. இது குறித்து விழா குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்.
மேலும், மாண்புமிகு.முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவைகளை கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.