‘கேஜிஎப்’,’கேஜிஎப் 2′ படங்களைத்தொடர்ந்து, நடிகர் யாஷ் அடுத்ததாக தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் யாஷிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள் இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘டாக்ஸிக்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், நாயகன் யாஷ் கையில் மிகப்பெரிய துப்பாக்கியுடன் காணப்படுகிறார். எனவே இப்படமும் கண்டிப்பாக பக்கா ஆக்சன் படமாக இருக்கும் என தெரிகிறது.மேலும் பான் இந்திய படமாக உருவாகும்
‘ டாக்ஸிக்’ திரைப்படம் வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தை எழுதி இயக்கும் கீது மோகன் தாஸ் கூறுகையில், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் எனது ரசிகர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த திரைப்படம். இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும், இந்தப்படத்திற்காக யாஷுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யாஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்கிறார்.