கோலமாவு கோகிலா, எல்கேஜி, கூர்கா,டாக்டர்,ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்யுடன் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிம்புவுடன் பத்து தல, விஷாலுடன் மார்க் ஆண்டனி, கட்டா குஸ்தி உட்பட பல படங்களில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
இவர் இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நண்பர்.தற்போது யோகிபாபுவுக்கு போட்டியாக காமெடி நடிகராக முன்னேறி வருகிறார்.
இந்நிலையில்,46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி இன்று காலை சங்கீதா என்ற சின்னத்திரை நடிகையை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.