கடந்த 2017 -ல் பா பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ் மீண்டும் தற்போது அவரது 50 ஆவது படத்தை கடந்த சில மாதங்களாக நடித்து, இயக்கி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை தனுஷ் தனது சமூக வலைதளத்தின் மூலம் தற்போது உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் உடனடியாக தனது இயக்கத்தில் மூன்றாவது முறையாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பையும் தனுஷ் தொடங்கியுள்ளார். தனது அக்கா மகன் வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டநிலையில், தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து தனுஷ், சரத்குமார் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அங்கு சரத்குமாரின் குடும்பத்தினருடன் தனுஷ்,எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.