ஜீன் இசையில் உருவான ‘பாண்டியும் சகாக்களும்’ படப்பாடல்களும் மற்றும் படத்தின் டிரையலரும் இன்று வெளியிடப்பட்டன. இந்த விழாவில் மூத்த இயக்குநர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர் ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பீ.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும் போது, “ என்னைப்பற்றியும் நிறைய வதந்திகள்… ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருப்பேன்… கலைத்தாய் என்னை தத்தெடுத்துக்கொண்டிருக்கிறாள்…