ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக தயாரிக்கும் படம் “ஜெய் விஜயம்”, இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார். இதில் அக் ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா. சென்னையில் நடந்தது.
இவ்விழாவில் நடிகர் இயக்குனர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது:*
இப்படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்த எல்லோருமே பாராட்டினார்கள். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் எடிட்டர் ஏ.சி.மணி கண்டன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் பால்பாண்டி இடைவிடாமல் ஷூட்டிங் நடந்தபோது முகம் சுழிக்காமல் பணி யாற்றினார்.
ஜெய் விஜயம் என்று படத்துக்கு டைட்டிலை வைத்ததற்கு காரணம் என் பெயர் ஜெய், விஜயம் என்றால் வெற்றி. இதற்கு முன்பு “அமைச்சர் ரிட்டர்ன்” என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படம் செய்தேன். எவ்வளவு செலவு செய் தாலும் கதைதான் மிக முக்கியம். இதற்கு முன்பு நிறைய படம் நடித்தி ருக்கிறேன். அதில் நிறைய தெரிந்த முகங்கள் நடித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த படங்கள் மக்களிடம் போய் சேரவில்லை. எனவே நல்ல கதைகள் தேர்வு செய்யச் சொன்னார்கள். ஆனால் நல்ல கதை கிடைக்க வில்லை. எதுவுமே வித்தியாசமாக இல்லை.
சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா என்றால் பைத்தியம். தமிழில் எல்லா படத்தையும் நான் பார்த்து விடுவேன். எந்த படத்தை கேட்டாலும் யார் ஹீரோ என்று சொல்லி விடுவேன். தெலுங்கு, இந்தி மலையாளம், இங்கிலீஷ் என பிற மொழி படங்களையும் பார்த்து விடுவேன்.
என் கேரக்டர் எப்படின்னா, யாராவது கஷ்டப்படுவதாக சொன்னால் அவங்க கிட்ட என்கிட்ட இருக்கிற எல்லா பணத்தையும் கொடுத்து விடுவேன். ஆனால் யாராவது ஒரு பைசா ஏமாற்றினாலும் எனக்கு பிடிக்காது.
பணத்தை வேஸ்ட் பண்ணவும் பிடிக்காது. நான் எனக்கு செலவு செய்ய மாட்டேன், மற்றவர்களுக்கு
கொடுப்பேன்.
ஜெய் விஜயம் நான் முதன்முறையாக தயாரிக்கும் படம். அதனால்தான் ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் என்று போட்டிருக்கிறேன். நான் நடித்த படங்களிலேயே குறைந்த பட்ஜெட்டில் தயாரித்த படம் இது. ஆனா நான் அதிகமாக பணம் கொடுத்தது இந்த படத்தோட மூலக் கதைக்குத்தான். இதில் நடித்த எல்லோருக்குமே நான் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். ஏனென்றால் அவர்கள்.யாருமே சம்பளம் வாங்காமல் இதில் நடித்தார்கள். ஹீரோயின் அக் ஷயா கண்டமுத்தன் (Akshaya kandamuthan) கூட சம்பளம் வாங்கவில்லை. டிவியில் பிரபலமாக நடித்து வரும் இவரை நான் தான் என்னுடைய அமைச்சர் ரிட்டர்ன் படத்தில் அறிமுகப்படத் தினேன். அந்த படத்துக்கு சம்பளம் கொடுத்தேன். ஆனால் கதை பிடித்திருந்தால் ஜெய் விஜயம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார்.
ஒரு ஆங்கில படத்தி லிருந்து இந்த கதையை எடுத்தேன். அதற்காக நிறைய விலை கொடுத்துவிட்டேன். அது என்ன கதை என்பதை இப்போது சொல்ல மாட்டேன். படம் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மலையாள படம் எப்படி எடுப்பார்களோ அப்படி எடுத்திருக்கிறேன். கதைக்கு அடுத்தபடியாக அதிகம் செலவழித்தது இதில் வரும் ஒரு ஆத்மா காட்சிக்குதான். இந்த ஆத்மாவை ஒரு புகை வடிவில் காட்டியிருக் கிறோம். அந்த புகை குழந்தையை காப்பாற்ற ஹீரோவுக்கு புகை வழிகாட்டும். இதில் இன்னொரு பெரிய சஸ்பென்ஸ் இருக்கிறது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.