சமீப காலமாக இளம் நடிகர்களிடையே பெண் வேடம் போட்டு நடிப்பது பரவலாகி வருகிறது இதற்கு காரணம் அவர்களது ரசிகர்களிடையே கிடைத்து வரும் பெரும் வரவேற்பு தான். கடந்த மாதம் வெளியான ‘ரெமோ’ படத்தில் கூட சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் நடித்திருந்தது குறிப்பிடதக்கது. . இந்நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு போட்டி நடிகராக கருதப்படும் விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்புக்கு மாறியுள்ளார். ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் புதிய படத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார். ‘ரெமோ’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போன்றே வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கிவரும் தியாகராஜா குமாரராஜா இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு லேடி கெட்டப் போட்டு நடிக்க வைத்துள்ளார். விஜய் சேதுபதியின் பெண் வேடமிட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. .