உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில்,தற்போது பிரபாஸின் ’கல்கி 2898AD’ என்ற படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கமல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.இப்படத்துக்காக இந்த படத்திற்காக கமல் மொத்தமாக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் கமல்ஹாசன், ‘கல்கி 2898AD’ படத்தின் 20 நாள் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ படத்திற்கு தயாராகி விட்டார் என்கிறார்கள்.