சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. இதில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்துக்கான திரைப்பட விழா சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. அந்தவகையில் மொத்தம் 57 நாடுகளிலிருந்து மொத்தம் 127 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி சிறந்த திரைப்படமாக மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவான அயோத்தி திரைப்படம் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனையொட்டி மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது படமாக உடன்பால் தேர்வு செய்யப்பட்டது. அதனையொட்டி அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் மற்றும் தயாரிப்பாளர் வெள்ளதுரைக்கு தடையாய்.ரூ.50ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் மாமன்னன் படத்தில் நடித்ததற்காக வடிவேலு சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ரூ.50ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த நடிகையாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸில் பெறும் முதல் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது போர் தொழில் படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜியும், சிறந்த எடிட்டருக்கான விருதை அதேபடத்தில் பணியாற்றிய ஸ்ரீஜித் சாரங்கும் பெற்றனர். அவர்களுக்கும் பரிசு தொகை ரூ.50,ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருதை செம்பி படத்தில் நடித்த நிலா தட்டி சென்றார். சிறந்த குறும்படமாக லாஸ்ட் ஹாட்ஸ் படம் தேர்வானது. அந்தப் படத்தை இயக்கிய பகவன் என்கிற மாணவருக்கு ரூ.10ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
தனி நபர் ஜூரி விருது பிரிவில் விடுதலை படத்தை இயக்கிய வெற்றிமாறனுகு சிறந்த இயக்குநர் விருது கிடைத்திருக்கிறது. அவருக்குரூ. 50.ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
உலக சினிமா பிரிவை பொறுத்தவரை, சிறந்த திரைப்படமாக ருமேனியா நாட்டை சேர்ந்த டியூட் கியூர்கியு இயக்கத்தில் உருவான ‘ப்ரீடம்’ படம் தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக பிரேசில் நாட்டை சேர்ந்த,’நில்டிங் கன்ட்ரி’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.