கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு தடை விதிக்கக் கோரி லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 10 ஆம் தேதி நடை பெற உள்ள நிலையில் படம் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிங்கார வேலன் தரப்பினர் கூறியாதவது, கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு தடை கேட்டு நாங்கள் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நாளை(திங்கட்கிழமை) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த மனு நாளை மறு நாள் விசாரணைக்கு வர உள்ளது.
சிங்கார வேலன் தரப்பில் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராக உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகன் ஆவார்..
ஆகையால் கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு தடை கிடைப்பது உறுதி என கூறினார்.