கடந்த ஒரு வருடமாக சிறு நீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நகைசுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து போண்டா மணியின் உடல் சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவருக்கு திரையுலகினர் பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.உடல் தகனம் குரோம்பேட்டை சுடுகாட்டில் நடக்கிறது
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இலங்கையில் பிறந்து, வளர்ந்து பின் தமிழ்நாட்டிற்கு வந்தவர். கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குநர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.ˇமணிக்குயில், தென்றல் வரும் தெரு, நிலா, இராவணன் என தொடர்ந்து தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதேபோல் ரஜினியின் முது, விஜய்யின் செல்வா, அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் திரையில் எட்டிப்பார்த்த போண்டா மணி, காமெடி ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார்.சுமார் 200 படங்களில் நடித்துள்ள போண்டா மணிக்கு கண்ணும் கண்ணும் என்ற படத்தில் வடிவேலுடன் இணைந்து நடித்த காமெடி இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. எந்த காமெடின்னு தெரியலையா அட அதுதாங்க “போலீஸ் வந்து அடுச்சு கேட்டாலும் சொல்லிறாதீங்க” அந்த காமெடி தான் மிகவும் பிரபலமாக்கியது.தொடர்ந்து வடிவேலுடன் இணைந்து பயணித்து ஏகப்பட்ட படங்களில் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகராகனார் .