தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக தனுஷின் அக்கா மகன் ஷரவண்குமார் அறிமுகமாகிறார்.
அவருக்கு ஜோடியாக பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்திலும், தனுஷ் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் ‘லியோ’ பட நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் ‘ஒரு அடார் லவ்’ பிரியா வாரியர் ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. . இது குறித்து நடிகர் தனுஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்கிற தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில்,” DD3- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. ஒரு வழக்கமான காதல் கதை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#DD3 is Nilavukku enmel ennadi kobam .. A usual love story♥️ #neek .. Motion poster with @gvprakash magic https://t.co/V4kT0oFReB @wunderbarfilms pic.twitter.com/6gvJGvaXEb
— Dhanush (@dhanushkraja) December 24, 2023