‘இன்று நேற்று நாளை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன்ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது..
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மாரி செல்வராஜ், கருணாகரன், இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அயலான் வருமா வந்துவிடுமா? எப்போ வரும்? என்று பல கேள்வி வரும். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னொரு படம் ஈஸியா பண்ணிவிடலாம்.
இது இவர்களை தாண்டி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து பண்ணியதில்லை. முதலில் இப்படத்தை தொடங்கும் போது பான் இந்தியா படமாக இல்லை. தற்போது இது பான் இந்திய படமாக உருவாகி விட்டது.இது தமிழ் மக்களுக்காக பண்ணியது. நாம ஆசைப்பட்ட படம் கண்முன்னே தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது.
இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் என எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும். ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன். ரகுமான் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார். நீங்கள் என்னை அண்ணா என்று சொல்கிறீர்கள். சிலர் திட்டுவார்கள். நடிப்பு வரவில்லை என்பார்கள் அதனை நான் காதில் வாங்குவதில்லை. என்னை பிடித்தவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த படத்தை தொடர்ந்து பண்ண வேண்டும் என்று ஆசை. என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் கூட சொல்ல விரும்பவில்லை.
இந்த படத்துக்கு நான் உதவி செய்தேன் என்கின்றனர். எல்லோரும் கொடுத்த தைரியம் தான் இப்படத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் படத்தை அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம் அதிக ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன் இவ்வாறு அவர் பேசினார்..24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.