கடந்த 12 -ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் மறுபடியும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கேப்டனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் படுகிறது. இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் “இது வழக்கமான மருத்துவ சோதனைதான் . நாளை இல்லம் திரும்புவார்”என்பதாக கூறப்பட்டிருந்தது . ஆனால் இந்த நிலையில்தான் விஜயகாந்துக்கு ‘கொரானா ‘ தொற்று இருப்பதாக மருத்துவமனை உறுதி செய்திருக்கிறது .