குள்ளமானவர் என்றால் அறிவு ,ஆற்றல் குறைவாக இருக்குமா?
“எவன்யா சொன்னான் ?” என்று இயக்குநர் மந்த்ரா வீர பாண்டியன் சண்டைக்கு வந்து விடுவார் போலிருக்கிறது.
ஊராரின் கேலிக்கு ஆளான குள்ளமான நாயகன் வெங்கட் செங்குட்டுவன் துப்பு துலக்கும் போஸ்ட் மேனாக வந்து பாராட்டுகளை அள்ளுவதுதான் கதை.
வழக்கமான கதைதான். ஆனாலும் குள்ளமான நாயகனை வைத்து அறிவுக்கும் உயரத்துக்கும் தொடர்பில்லை என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.நாயகன் வெங்கட் செங்குட்டுவன் குள்ளம் என்கிற தாழ்வு மனப்பான்மை அகற்றி சிறப்புடன் நடித்திருக்கிறார். கேலிகளை புறம் தள்ளுகிற பாங்கு சிறப்பு. கோபம் வந்தாலும் பாசம் குறையாமல் கையாளுகிற பாங்கு ,காதல் வயப்படுவது என வெகு இயல்புடன் வெளிப்படுத்துகிறார்.
நாயகி ஆராத்யா, காவலதிகாரி.. காதலை வெளிப்படுத்துவது,நாயகனுடன் இணைந்து துப்புதுலக்குவது என அசத்தியிருக்கிறார்.
நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இவானா , சுமைதாங்கி. முக்கியமான கேரக்டர். பாராட்டுக்குரியவர்.
எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் இருவரும் சரியான தேர்வு.
இசைஞானியின் மகன் கார்த்திக்ராஜா இசை.வேறென்ன சொல்ல?
பர்வேஸ் ஒளிப்பதிவு.
எழுதி இயக்கியிருப்பவர் மந்த்ராவீரபாண்டியன்,
புதிய இயக்குநர் வளரும் நாயகன் ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட நல்ல படம்.
–தேவிமணி