நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடந்தது மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ளது. இதில்,தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவ்விழாவில் தனுஷ் தனது 2 மகன்களுடன் கலந்துகொண்டார், உள்ளே வந்ததும் ரசிகர்களை நோக்கி கையசைத்த தனுஷ் தனது மகன்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவ்விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நாயகி ப்ரியா மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.