தமிழ்த்திரையுலகில் கடந்த 2010 இல் வெளியான ‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை அமலா பால். தொடர்ந்து தெய்வத் திருமகள், தலைவா,வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து வந்த அமலாபால் கடந்த 2014 இல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017-இல் பிரிந்தனர். இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.
கோவாவில் செட்டிலாகியுள்ள ஜெகத் தேசாயுடன், அங்கு சுற்றுலா செல்லும் போது அமலா பாலுக்கு நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக அமலா பால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார்.இப்பதிவை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram