தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நேருக்கு நேர், காதலே நிம்மதி, சந்திப்போமா ஆகிய படங்களில் நடித்த சூர்யாவுக்கு, 1999ஆம் ஆண்டு விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த பெரியண்ணா திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
விஜயகாந்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த காலக்கட்டம் அது. விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த பின் தான், சூர்யாவுக்கு பூவெல்லாம் கேட்டுப்பார், நாந்தா உள்ளிட்ட திரைப்படங்கள் கிடைத்தது. எனவே விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சூர்யா நேரில் வருவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்..
பின்னர் அங்கிருந்த நிருபர்களிடம் கூறுகையில்,அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது.ஆரம்பத்தில் நான் சினிமாவுக்கு வந்தபோது பெரிய பாராட்டு கிடைக்கவில்லை. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது .முதல்நாளிலேயே என்னை அழைத்து
அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார் எங்களுடன் சகோதர அன்புடன்தான் பழகினார். முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார். டான்ஸ், ஸ்டன்ட் என எனக்கு எல்லாம் பார்த்து செய்தார். உச்ச நட்சத்திரம் என்ற ஈகோ இல்லாமல் பழகுவார். அவரை பின்னாளில் சந்தித்துப் பேச முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.
இறுதி ஊர்வலத்தில் அவருடன் இல்லை என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத வருத்தம்தான். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.”இவ்வா