நடிகர் ரஜினிகாந்த் தற்போது த. செ. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’படத்தில் நடித்து வருகிறார். மும்முரமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்ததும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அயலான் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தலைவர் 171 ல் நடிக்க தனக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கு தலைவர் 171 படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் ஏப்ரலில் தொடங்கஉள்ளதாக கூறப்படுகிறது முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் படபிடிப்பு நடத்தப்படவுள்ளதாம் மேலும் இப்படத்தில் ரஜினியை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.