விஜய்யின் 68வது படமான‘ கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது.இதில், தமிழ்த்திரையுலகில் 80களில் ரஜினி,கமலுக்கே கடும் சவாலாக வலம் வந்த ‘மைக்’ மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இதில் விஜய்யும் இளையராஜாவும் இணைந்து ஒரு பாடலும் பாடியுள்ளனர்.இந்நிலையில்,தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களை குஷி படுத்தும் நோக்கில் . ‘Meet The GOAT squad’ என்ற கேப்ஷனுடன் இப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ,அதில், விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் அதி நவீன எந்திர துப்பாக்கிகளுடன் செம கெத்தாக உள்ளனர்.இப்போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகிறது.