ஒவ்வொரு புத்தாண்டு பொங்கல் தீபாவலி என முக்கிய விசேஷ நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்தாலும் சரி,இல்லை என்றாலும் சரி, அவருக்கு வாழ்த்து சொல்ல ரசிகர்கள் அவரது போயஸ் காற்றுடன் வீட்டின் முன்பு குவிந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ரஜினியும் அந்த சம்யங்களில் வீட்டில் இருந்தால்,ரசிகர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலயில் இன்று காலை முதலே ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் குவிந்திருந்த நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு தனது பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், அனைவரும் ஆரோக்கியத்துடன் மனநிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இந்த பொன் நாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும், நன்றி’ என்று கூறினார்.