காதலில் எத்தனை அனுபவங்கள் இருந்தாலும் விஜயசேதுபதி- கத்ரினா இடையில் அரும்புகிற காதல் ( ? ) அதனால் ஏற்படுகிற வலி மாதிரி ஒரு ‘சுவையான’ நிகழ்வு ,அனுபவி ராஜா அனுபவி மாதிரியான சுகம்தான்.!
கிறிஸ்துமஸ் நாளில் நடக்கிற அந்த எதிர்பாராத அனுபவத்தை திரில்லராக ஸ்ரீ ராம் ராகவன் நமக்கு கொடுத்திருக்கிறார். பொங்கல் -தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படும் இந்த வாரத்தில் வரக்கூடிய படம் இல்லை. முன்னதாகவே வந்திருந்தால் கணிசமாக வாரி கட்டியிருக்கலாம் வசூலை.! நல்ல படம்.. !
மது கோப்பைகளில் மஞ்சள் வண்ண திரவம் ! ஆண் பெண் பாகுபாடின்றி இரைப்பைகளை நிரப்புகிறது. ஆனந்தம் பொங்குகிற அந்த இரவில் கத்ரீனாவுக்கு ஏற்படுவது எதிர்பாராத துன்பம் . தோள் கொடுக்கிறார் விஜயசேதுபதி . அதன்பின்னர் நடப்பதெல்லாம் தென்றல் ,தேள் கடி மாதிரிதான்.!கத்ரினா கணவனை இல்லாமல் செய்தவள் ,சிங்கிள் மதர்.சேது காதலில் அடிபட்டவர். இருவரும் ஒரு புள்ளியில் இணைகிற வாய்ப்பு ஏற்படுகிற போது குறுக்கில் பாய்கிறது குத்தீட்டி. செமையான சீன் . இதன் பின்னர் நடந்ததென்ன?
தியேட்டர் சென்று பாருங்கள் . அனுபவிக்கனும் !
விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் சூப்பர். 96 படம் மாதிரியான மற்றொருபயணம். இரண்டு பாலிவுட் நாயகிகளை மட்டும் இவர் கவரவில்லை. நம்மையும் கட்டிப்போட்டுவிடுகிறார் . கருப்பு கந்தர்வ ராஜன்.! கத்ரினா கைஃப்பின் சோகமும் திடுக்கிட வைக்கும் செயலும் அவரை நியாயப் படுத்துகிறது. மாற்று சிந்தனை ஏற்படவில்லை.
ராதிகா ஆப்தேவுடனான விஜய்சேதுபதியின் காதல் உளவியல் சார்ந்தது. காதல் ஈர்ப்பும் கடும் அதிர்ச்சியையும் அழகுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
ராதிகா, சண்முகராஜன், கவின்பாபு ஆகியோர் கதையின் கடந்து போகும் மேகங்கள் .!
மதுநீலகண்டனின் ஒளிப்பதிவு ,ப்ரீத்தம் இசையில் பாடல்கள் . டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை நமது நாடி நரம்புகள் மாதிரி. தேவைகளை நிறைவு செய்திருக்கிறார்கள் .
பிரதீப் குமார்.எஸ்.அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் கதையின் படைப்பாளிகள் . இவர்களின் கதையின் தன்மையை உயர்த்திக்காட்டுகிறது.
நல்ல கதை. சிறந்த நடிப்பு, கொண்டாட்டப்பட வேண்டிய மேர்ரி கிறிஸ்துமஸ்.!
-தேவிமணி .