மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், பலாசா 1978, ‘ஸ்ரீ தேவி சோடா சென்டர்’ கருணா குமார் இயக்கத்தில், பான்-இந்திய திரைப்படமாக உருவாகிறது “மட்கா”, இப்படத்தை
டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின் SRT என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு, பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
வருண் தேஜுவின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில், இப் படத்திலிருந்து ஓப்பனிங் பிராக்கெட் என்ற வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ
கிராமபோனில் கதாநாயகன் இசையை வாசிப்பதை காட்டும் காட்சியுடன் துவங்குகிறது. பின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது. இதில் நவீன் சந்திரா கேங்ஸ்டராகவும், பி ரவிசங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கதாநாயகனின் சிறுவயதுப் பகுதி அவன் கபடி விளையாடுவதைக் காட்டுகிறது, பின்னர் அவன் சூதாட்ட மாஃபியாவின் தலைவனாகிறான். அவன் ஒரு சிகார் புகைத்துக்கொண்டு, யாரிடமோ போனில் ‘ப்ராமிஸ்’ என்று சொல்வதோடு வீடியோ நிறைவுபெறுகிறது.
1958 மற்றும் 1982 க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். ஒளிப்பதிவாளர் A கிஷோர் குமார் மற்றும் ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை . இந்த அறிமுக வீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.
மட்கா படக்கதை முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார்.
இதில் வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் , கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.