மோகன் ராஜா இயக்கத்தில்,நயன்தாரா முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.இரட்டை எழுத்தாளர்கள் சுபா இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதவுள்ளனர். ஏற்கனவே மோகன்ராஜா படங்களில் பணிபுரிந்துள்ள இந்த இரட்டையர்கள் தற்போது மூன்றாவது முறையாக இணைகின்றனர்.