இராமர் கோவில் புதிதாக அயோத்தியில் திறந்த பிறகு ஒருநாள் வேலைத் திட்டம் மாதிரி கோவிலை பெருக்கி சுத்தம் செய்தார்கள் பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள்.
தமிழநாட்டில் அங்கொன்றும் இங்குமாக இராமர் கொண்டாடப்பட்டார்.
பிஜேபியை சேர்ந்த குஷ்பூ சுந்தர் ‘ஸ்லோகம் ‘ சொன்னார். அவருக்கு ஸ்லோகம் சொல்வதெல்லாம் புதிசு. சஷ்டி கவசம் அவருக்கு தெரியாது என்று நம்பலாம்.
ஆன்மீகம் அவரது வீட்டுக்குள் மட்டுமே ஆராதனை செய்யப்பட்ட நிலையில் வாய்க்குள் வராத சமஸ்கிருதத்தை எப்படி சரியாக சொல்ல முடியும்?
“ராம ராம வரானனே ” என்று உச்சரித்திருப்பதாகவும் ,இது பிழையானது என்று சொல்கிறார்கள். “ராம நாம வரானனே ” என்று பாடியிருக்க வேண்டுமாம்.
இது சரியா ,இல்லையா என்பதை அண்ணாமலை போன்ற வல்லவர்கள்தான் சொல்ல வேண்டும்.