விதவிதமான கார்களின் மீது அதிக விருப்பம் உடைய நடிகர் விஜய், தற்போது புதிதாக ஒரு ‘பிஎம்டபிள்யூ’ வாங்கி பிரமிக்க வைத்துள்ளார். முக்கியமாக இந்த ‘பிஎம்டபிள்யூ பலவிதங்களில் செம்ம ஹை டெக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் கார் மாடலான இது இந்தியாவில் தற்போது தான் விற்பனைக்கு வந்துள்ளதாம். ‘
பிஎம்டபிள்யூ’ ஐ7 எக்ஸ் டிரைவ் 60′ என்ற இந்த மாடல் விஜய் வாங்கியுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் என்பதும் முக்கியமானது. 31.3 இன்ச் 8கே ஸ்கிரீன், மினி ஹோம் தியேட்டர் என பல அதிநவீன டெக்னாலஜி உள்ள ‘பிஎம்டபிள்யூ’ ஐ7 எக்ஸ் டிரைவ் 60 கார் , விஜய்யின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.
இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 2.5 கோடி ரூபாய் ஆகும். விஜய்யிடம் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ரேஞ்ச் ரோவர் எவோக், மெர்ஸிடஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ , மினி கூப்பர் எஸ் , ஆடி ஏ 8 ,பிஎம் டபிள்யூ எக்ஸ் 6 போன்ற கார்களை பயன்படுத்தி வருகிறார்.