தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் ஹரியும் மூன்றாவது முறையாக ரத்னம். படத்துக்காக இணைந்துள்ளனர் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக் அறிவித்து உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விஷால் துப்பறிவாலன் 2 படத்தை இயக்கி நடிக்கிறார்,
விஷால். மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் மிஷ்கினை இப்படத்திலிருந்து விஷால் அதிரடியாக நீக்கியதோடு,தானே அந்தப் படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ரத்னம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் இப்படத்தின் பணிகளில் விஷால் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.