‘பிளாக் அண்ட் ஒயிட் மீடியா’ நிறுவனம் ஜூட் ஆனந்த்.டே தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் வீ.ஜெ. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் மேனன் நடிப்பில், பேண்டஸியான காதல் கதையாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப்படம் குறித்து இயக்குனர் வீ.ஜெ. மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,”1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸி யாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருக்கிறோம். இப்படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்சி.ஆர். நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ கவனிக்க, ஷீன் எல்.க்ளஃபோர்ட் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் வரும் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.