கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி நடிக்கிறார். இப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார். இப்படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில், இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. திரிஷா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது கிடையாது இதனால் சம்பளம் கூட இரண்டாம் பட்சம் தான் என திரிஷா ரஜினியுடன் நடிக்க துடிப்பதால் இவருக்கு ஓ.கே. சொல்லி விடுவார் ரஜினி என்கிறார்கள்.ரஜினி தற்போது ‘2.ஓ’ படப்பிடிப்பில்நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இது கபாலி-2 தான் என அடித்து சொல்கிறது கோலிவுட் தரப்பு!