சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் ” தூவள் ” படத்தை தொடர்ந்து ‘சிஜெர் பிக்சர்ஸ்’ கமலகுமாரி, ராஜ்குமார்.என் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாக தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘எக்ஸ்டிரீம்’ என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை ” தூவள் ” பட இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ‘சின்னத்திரை’ ரக்ஷிதா மஹாலக்ஷ்மி , ‘அயலி’ அபி நட்சத்ரா , ஆனந்த் நாக், ‘சிக்லெட்’ அம்ரிதா ஷெல்டர்,ஆகியோர் முக்கிய கதாபா த்திரங்களில் நடிக்க,இவர்களுடன் ராஜ்குமார், சிவம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவை டி.ஜே பாலா கவனிக்க, ராஜ் பிரதாப் இசையமைக்கிறார்.இப்படம் குறித்து இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறுகையில்,”இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம்.” எக்ஸ்டிரீம் ” என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவு தான் இந்த படத்தின் கதை. மனிதன் என்ப தே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான். அதை மீறும்போது தான் மிருகமாக மாறி விடுகிறோம்.