நடிகர் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்மன்றத்தினர் ஐஸ்வர்யாவிற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இக்கொடி குறித்து அவர்கள் கூறுகையில்,”: இந்த படத்தை இயக்கிய தலைவரின் மகள் ஐஸ்வர்யா அவர்கள் இன்னும் பல சிறப்பான பல படங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும்,ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் புரட்சிகரமான கருத்தை வைத்து இருக்கிறார் என்பதற்காக கொடியில் சிவப்பும், மிதமான முறையில் படத்தின் கதையை கொண்டு சொன்றதால், மஞ்சலும், அவர் என்றைக்கும் வெற்றி அடைய வேண்டும் என்பதால் அவரின் உருவத்தை பச்சையில் பொறுத்து இருப்பதாகவும். இந்த படம் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். எபிகின்றனர்
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா உருவம் பதித்த கொடியில் “சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சிகப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் கூடிய கொடியை ஏந்தி வந்த ரசிகர்களால் ஐஸ்வர்யா தனுஷ் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்