செவ் வணக்கம் ! லால் சலாம் !
எதற்காக இந்த இடதுசாரி முழக்கத்தை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வரியா ரஜனி என்பது படத்தைப் பார்த்த பின்னர்தான் புரிந்தது?
இயக்குநரின் நோக்கம் மத நல்லிணக்கம்.
தந்தை ரஜினியின் மீதான ‘சங்கி ‘என்கிற பார்வையை அகல வேண்டும்.
வணிகரீதியான, வெற்றி பெற வேண்டும்.
இந்த மூன்றும் தான் ஐஸ்வரியாவின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து . நிறைவேறி இருக்கிறதா ?
பார்க்கலாம்.!
படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு “என் அன்புத் தாய் ஐஸ்வரியா வெற்றிபெற வாழ்த்துகிறேன்””என்று ரஜினிகாந்த் அவரது பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். கலெக்ஷன் தான் இதன் விடையாக இருக்க முடியும்.
அந்த ஊரில் இசுலாமிய ,’இந்து’ஒற்றுமை பொறாமைப் படும் அளவுக்கு இருந்தது. பாச மலர்களாக இருந்தவர்களை எப்படி கிரிக்கெட் போட்டி எதிரிகளாக மாற்றியது என்பது மைய்ய கருத்து. முட்டிக்கொள்ளும் அளவுக்கு மோசமாக்கியதில் மொய்தீன் பாய் ரஜினியின் மகன் விக்ராந்த்துக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது கை தூண்டிக்கப் படுகிற அளவுக்கு விரோதம் உக்கிரமாக முற்றிப்போய்க் கிடந்தது .
இப்படியாக போகிற கதையில் ‘நடிப்பு ஏரியாவில் ‘யார் யார் ஸ்கோர் பண்ணி யிருக்கிறார்கள் ?
கதையின் நாயகன் விஷ்ணு விஷாலாக இருந்தாலும் விக்ராந்த் ,செந்தில் இருவரும்தான் அதிக விக்கெட்களை தூக்கியவர்கள். ரஞ்சி கோப்பையில் விளையாட தேர்வு பெற்ற நிலையில் இவரது கை தூண்டிக்கப்படுகிறது. காரணம் விஷ்ணு விஷால் .!அப்பாவுக்கு தெரியாமல் விஷ்ணுவின் தலையை தரையில் உருட்ட வேண்டும் என்கிற வெறி மூர்க்கத்தனமாக முகத்தில் விளையாடுகிறது.இவருக்கு குறைவான காட்சிகள் என்றாலும் பொறுப்பும் ,அழுத்தமும் அதிகம்.
அதிகமான காட்சிகளில் விஷ்ணு விஷால் . நிறைவாக செய்திருக்கிறார்,.
அரசியல்வாதிகளான கே.எஸ் ரவிக்குமாரும், போஸ்டர் நந்தகுமாரும் அரசியல் ஆதாயத்திற்காக, கிராம மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதில், வெற்றியும் கிடைக்கிறது. இதான் பின்னர்தான் மொய்தீன் பாய் ரஜினி . அழுத்தமுடன் படமாக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு விஷாலின் அம்மாவாக ஜீவிதாவும், விக்ராந்தின் அம்மாவாக நிரோஷாவும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில், ரஜினிகாந்த், நிரோஷா, விக்ராந்த் இடம் பெறும் சில காட்சிகள், கண்களில் நீரை வரவழைக்கிறது.
தம்பிராமையா, தனது வழக்கமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். விவேக் பிரசான்னா, சிறப்பாக நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னா க்ளைமாக்ஸில் திருந்துவது, சினிமாவுக்கே உரிய போங்கு!
அரசியல் லாபத்திற்காக, நடந்துவரும் மோதல்கள் குறித்து இப்படம் பேசியிருப்பதற்காக, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டலாம். சரியான தருணத்தில் இப்படம் வெளியாகியிருப்பது சிறப்பு. அதோடு திருவிழாவிற்கான காரணம் குறித்து செந்தில் மூலமாக பேசியிருப்பதும் சிறப்பானது தான்.
கபில் தேவ் வரும் காட்சிகள், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு, ஏ.ஆர். ரஹ்மான் இசை, இரண்டுமே படத்தின் பலமாக இருக்கிறது. , ‘காந்தாரா’ போல் ஒருவர் அவ்வபோது முகம் காட்டுவது, கர்ஜிப்பது உட்டாலங்கிடி கிரி கிரி.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்!
இன்றைய அரசியல் சூழ்நிலையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வந்திருக்கும் லால் சலாம் படத்தை, எந்தவிதமான பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால், உங்களை ஏமாற்றாது!
–தேவிமணி