ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை மும்பையில் வெளியானது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஐ இணையதளத்தில் YOUTUBE இல் நேரலையாக ஒளிபரப்புவதாக படக்குழு அறிவித்திருந்தது.ஆனால் வெகு நேரமாகியும் நிகழ்ச்சியை காட்டாமல், குறிப்பிட்ட நேரத்தில் விஜய் ஆன்டனி போன்ற திரைத்துறை சேர்ந்தவர்கள், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பேசுவதை காட்டியதால் இணையதள ரசிகர்கள் கடும் எரிச்சல் அடைந்தனர்.ஆனால் அவர்கள் பேசுவது விடியோவாக தெரிந்தாலும் என்ன சொல்கிறார்கள் எனபதை கேட்க ஆடியோ சத்தம் ஏதும் வரவில்லை.இதனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமும், கடுப்பும் தான் மிஞ்சியது. இதில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.