இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ஜெ.பேபி.அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில்உருவாகியுள்ள இப்படத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன்,
கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண்மற்றும் பலர் நடித்துள்ளனர்..
இந்தப்படம் வரும் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதள் வழங்கியுள்ளனராம்..
இப்படத்தை குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள்.
பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்கிறது படக்குழு..இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன்,கவனிக்க,
டோனி பிரிட்டோ.இசையமைத்துள்ளார்