தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுக்கு மகன், மகள் உள்ளனர். இதில்,மகள் சித்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடித்த ’சர்க்கார் வாரி பாட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் சித்தாரா குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்த மர்ம ஆசாமிகள் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே மகேஷ் பாபுவின் மனைவி, நர்மதா தனது சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்திருந் தார்.
இந்நிலையில்,இவ்விவகாரம் குறித்து, காவல் துறையில் புகார் அளித்துள்ள நர்மதா சித்தாராவின் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவரது பெயரில் போலி கணக்கை உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து போலி அக்கவுண்டில் இருந்து வரும் லிங்குகளை நம்ப வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படும் வரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.